/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பஸ்ஸுக்கு அடியில் சிக்கிய தொழிலாளி உயிர் தப்பினார்பஸ்ஸுக்கு அடியில் சிக்கிய தொழிலாளி உயிர் தப்பினார்
பஸ்ஸுக்கு அடியில் சிக்கிய தொழிலாளி உயிர் தப்பினார்
பஸ்ஸுக்கு அடியில் சிக்கிய தொழிலாளி உயிர் தப்பினார்
பஸ்ஸுக்கு அடியில் சிக்கிய தொழிலாளி உயிர் தப்பினார்
ADDED : மே 22, 2010 03:37 AM
ஈரோடு: பஸ்ஸுக்கு அடியில் சைக்கிளுடன் சிக்கிக் கொண்டவர் காயமேதுமின்றி உயிர் பிழைத்தார்.
ஈரோடு பெருந்துறை ரோடு காமராஜர் சிலை அருகே காங்கேயம் எம்.எல்.ஏ., விடியல் சேகர் தலைமையில் ராஜிவ் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
அங்கு கடும் கூட்டம் கூடியதால், மற்ற வாகனங்கள் திணறியபடி சென்றன. ஈரோடு ஃபர்னிச்சர் கடையில் பணிபுரியும் கருங்கல்பாளையத்தை சேர்ந்த மோகனசுந்தரம் (40) சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் சென்ற தனியார் பஸ் மோகனசுந்தரம் மீது மோதியது. நிலை தடுமாறிய அவர் பஸ்ஸுக்கு அடியில் சைக்கிளுடன் சிக்கினார். சைக்கிள் மீது பஸ் ஏறி நின்றது. மூன்று புறமும் சிக்னலில் காத்திருந்தவர்கள் இச்சம்பவத்தை கண்டதும் பதை பதைத்து போயினர். சில விநாடிகளில் மோகனசுந்தரம் காயமேதுமின்றி எழுந்து வந்தார். அதன் பிறகே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். செலவுக்காக பஸ் டிரைவரிடம் ஆயிரம் ரூபாயை போலீஸார் பெற்று கொடுத்தனர். நொறுங்கிய சைக்கிளை தூக்கிச் சென்றார் மோகன சுந்தரம்.